search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்ந்து காட்டுவோம் திட்டம்"

    • 30 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி மற்றும் காவேரிப்பா க்கம் ஆகிய வட்டாரங்களை சார்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சுயஉதவிக் குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக 30 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தில் 10 சதவிகிதம் பயனாளிகளின் பங்களிப்பு, 60 சதவிகித வங்கிகடன், 30 சதவிகித திட்ட மானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்ப டையில் தொழில்கடன் வழங்கப்பட உள்ளது.

    ரூ.5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண் தொழிலாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையுள்ள தொழில்திட்டம் குறு தொழிலாகவும், ரூ.15 லட்சத்திற்கும் மேலான தொழில்திட்டம் சிறு தொழிலாகவும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

    சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.திட்டத்தில் சிறப்பு சலுகையாக மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவிகிதம் மட்டுமே பயனாளி களின் பங்களிப்பாக இருந்தால் போதுமானது.

    இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில்மைய அலுவலர்களை (செல்-9344672756) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

    • தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
    • எண்ணெய் உற்பத்தி செய்து "ஸ்ரீ-காஞ்சி" எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் ஆரம்பிக்கபட்ட மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 1947 உறுப்பிளர்களை ஒருங்கிணைத்து வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

    இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்து மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்திட, வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி. துவக்கி வைத்து தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.

    இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் வேர்கடலை, எள்ளு மற்றும் தேங்காய் கொள்முதல் செய்து மதிப்பு கூட்டுதல் நடவடிக்கையாக எண்ணெய் உற்பத்தி செய்து "ஸ்ரீ-காஞ்சி" எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் 113 உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பச்சைப்பயிறு சாகுபடி குறித்த சமுதாய பண்ணை பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
    • மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    பொன்னேரி:

    தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தடபெரும்பாக்கம் ஊராட்சியில் பச்சைப்பயிறு சாகுபடி குறித்த சமுதாய பண்ணை பள்ளி துவங்கப்பட்டுள்ளது.

    இந்த சமுதாய பண்ணை பள்ளி மூலம் பச்சைப் பயிறு விதை விதைக்கும் நிகழ்ச்சி தடபெரும்பாக்கம் ஊராட்சி சிங்கிலிமேடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மீஞ்சூர் வட்டார அணித்தலைவர் கா.கணபதி, திட்ட செயலர் அருள், ஊராட்சி மன்ற துணை தலைவர் சபிதா பாபு , ஊராட்சி அளவில்லா கூட்டமைப்பு செயலாளர் சுகுணா, பயிற்சியாளர் அனுசுயா மற்றும் தடபெரும்பாக்கம் மருதம் உழவர் உற்பத்தியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • வருகிற 27 - ந் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுரை
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் தேவையை பொறுத்து மண்டல, மாவட்ட, வட்டார அளவில் பண்ணைசார் தொழில்கள், குழுத் தொழில்கள் மற்றும் தனிநபர் தொழில்களை மேம்படுத்திடும் வகையில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்திட தொழில்நுட்ப ஆலோசகர்கள் , தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணிக்கு தேவையான கல்வித் தகுதி , பணி அனுபவம் , நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்கள் அனைத்தும் https : // www.tnrtp.org என்கிற இணைய தளத்தில் உள்ளது . இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதள முகவரியில் வருகிற 27 - ந் தேதி ( செவ்வாய்கிழமை ) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார் .

    • முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள மகளிர்களுக்கு ஆடை வடிவமைப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர் மயிலன், துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    குண்டடம்:

    குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட கொக்கம்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் சமுதாய திறன் பள்ளி திட்டத்தின் கீழ் ஆடை வடிவமைப்பு திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமணி, துணைத்தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள மகளிர்களுக்கு ஆடை வடிவமைப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    அதேபோல் பெரிய குமாரபாளையம் ஊராட்சியில் காயர் கால்மிதி தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.ராஜ், துணைத்தலைவர் குருசாமி ஆகியோர் உடன் இருந்தனர். அதேபோல் ஜோதியம்பட்டி ஊராட்சி–யில் உடனடியாக உணவு தயாரிக்கும் மசாலா பொடிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற தலைவர் மயிலன், துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு மேலும் தொழில் முனைவோருக்கான வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை குண்டடம் வட்டார அணித் தலைவர் கனகராஜ், பயிற்றுனர்கள் வனிதா, தனலட்சுமி, சிவக்குமார், நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்கவும், ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும் வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் உருவாக்கப்பட்டது.
    • தமிழகத்தில் 3,994 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் :

    கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்கவும், ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும் வசதியாக வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் இத்திட்டம் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

    வறுமை ஒழிப்பை தாண்டி, நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் தேர்வான ஒன்றியங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 120 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,994 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பொங்கலூர், உடுமலை, குண்டடம் ஒன்றியங்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் ஊராட்சி அளவிலான உற்பத்தியாளர் குழு, நிதி குழு, இளைஞர் குழுக்கள் உருவாக்கி, நிதி ஒதுக்கப்படுகிறது. சமூக திறன் பயிற்சி அளித்ததன் மூலமாக, புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, கிராமப்புற மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

    5 ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும், வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணிகளை செயல்படுத்த, ஊராட்சி அளவிலான தொழில்சார் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்ட மேம்பாடு தொடர்பாக, மாவட்ட அலுவலர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது.இந்நிலையில் பயிற்சி பெற்ற மாவட்ட அலுவலர்கள் தொழில் சார் பயிற்சியாளருக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக கிராமப்புற மக்கள் மேம்பாடு, வேலை வாய்ப்பு உருவாக்கம், திறன் பயிற்சி போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    ×